×

காட்டுத்தீயாய் பரவும் கொரோனா… பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. 3,890 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 36,73,802 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இரண்டாம் அலையின் ஆரம்பிக்கட்டத்தில் நாளொன்றுக்கு 20 முதல் 40 ஆயிரம் வரையிலேயே இருந்த பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 4 லட்சத்தை எட்டியது. தற்போது 3.26 லட்சமாக குறைந்துள்ளது. இதனிடையே, பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. 3,890 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 36,73,802 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இரண்டாம் அலையின் ஆரம்பிக்கட்டத்தில் நாளொன்றுக்கு 20 முதல் 40 ஆயிரம் வரையிலேயே இருந்த பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 4 லட்சத்தை எட்டியது. தற்போது 3.26 லட்சமாக குறைந்துள்ளது.

இதனிடையே, பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாள வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது. மாநில அரசுகளுடன் மத்திய அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்தது. அதன் படி, பல மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.