×

பாடகர் எஸ்.பிபி மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

பிரபல பாடகர் எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். மக்கள் மனதில் தனது பாடல் வசத்தால் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்மையில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியான செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அவர் மீண்டு வர வேண்டும் என பிரபலங்களும் பொதுமக்களும் இசை பிரியர்களும் பிரார்த்தித்து வந்தனர். இந்த நிலையில் தீவிர நிமோனியா மற்றும்
 

பிரபல பாடகர் எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

மக்கள் மனதில் தனது பாடல் வசத்தால் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்மையில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியான செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அவர் மீண்டு வர வேண்டும் என பிரபலங்களும் பொதுமக்களும் இசை பிரியர்களும் பிரார்த்தித்து வந்தனர்.

இந்த நிலையில் தீவிர நிமோனியா மற்றும் இதய – சுவாச மண்டல செயலிழப்பால் பாடகர் எஸ்.பிபி இன்று பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திரு.எஸ்பிபி அவர்களின் மறைவால் நமது கலாச்சார உலத்துக்கு பேரிழப்பு. நாடு முழுவதும் எல்லா வீட்டிலும் ஒலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் இசை பல சகாப்தங்களாக பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி.” என குறிப்பிட்டுள்ளார்.