×

கொரோனா தடுப்பூசி – ஜைடஸ் நிறுவனத்தில் பிரதமர் மோடி!

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஆய்வு செய்ய புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் அகமாதபாத்தில் உள்ள ஜைடஸ் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். குஜராத் அரசு சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜைடஸ் மருந்து நிறுவனத்துக்குச் சென்றார். அங்கு ஏராளமான மக்கள் கூடிய நிலையில், அவர்களை கையசத்து பிரதமர் மோடி உற்சாகப்படுத்தினார். பின்னர் ஆய்வகம் சென்ற அவர், ஆய்வக உடைகள், பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு
 

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஆய்வு செய்ய புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் அகமாதபாத்தில் உள்ள ஜைடஸ் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். குஜராத் அரசு சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜைடஸ் மருந்து நிறுவனத்துக்குச் சென்றார்.

அங்கு ஏராளமான மக்கள் கூடிய நிலையில், அவர்களை கையசத்து பிரதமர் மோடி உற்சாகப்படுத்தினார். பின்னர் ஆய்வகம் சென்ற அவர், ஆய்வக உடைகள், பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு மருந்து தயாரிக்கும் இடங்களைப் பார்வையிட்டார்.அங்கிருந்த மருத்துவர்கள், ஆய்வாளர்களுடன் மருந்து உற்பத்தி விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வினை முடித்துக் கொண்டு பிரதமர் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.