×

பி.எம். கேர் நிதி அரசு அமைப்பு கிடையாது! நீங்க யாரும் கேள்வி கேட்க முடியாது- பிரதமர் அலுவலகம்

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொடிய வகை கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் இது வரை 5,024 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 76,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பதற்காக ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைக்களுக்காக மட்டும் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து வெளியே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை
 

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொடிய வகை கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் இது வரை 5,024 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 76,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பதற்காக ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைக்களுக்காக மட்டும் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து வெளியே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் என பலரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர். பிரதமர் நிவாரண நிதி PMNRF இருக்கும்போது இப்போ புதுசா எதுக்கு PM CARES ? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் அபய் குப்தா என்பவர், பிஎம் கேர் நிதி குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். பிஎம் கேர் நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை வந்துள்ளது? அதில் இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம் பி.எம்.கேர் நிதி அமைப்பு அல்ல என்றும், எனவே அதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என்றும், எனினும் அதற்கான இணையதளத்தில் சென்று விவரங்களை அறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.