"நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டம் "- சபாநாயகர் பரபரப்பு தகவல்
நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம்பிர்லா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது மக்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத சம்பவத்திற்கு திட்டம் தீட்டப்பட்டது. காங்கிரசை சேர்ந்த் எம்பிக்கள் பலர் பிரதமர் மோடியை பேச விடாமல் தடுக்க முயன்றனர். தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டதால் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டாம் என பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டேன். எதிர்க்கட்சி எம்பிக்களின் திட்டத்தை அறிந்தே நேற்று மக்களவையில் பேச வேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொண்டேன். தமிழக காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் பிரதமரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம்பிர்லா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சீனா விவகாரத்தை முன்னிறுத்தி ராகுல் காந்தி மக்களவையில் கடும் நெருக்கடியை பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுத்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எதிர்க்கட்சிகள் அவரைத் தாக்க கூடும் என்பதால் அவரை மக்களவைக்கு வர வேண்டாம் என தான் கூறிவிட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்துள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது