×

‘கேரள முதல்வராக’ பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார்!

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி 99 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் பினராய் விஜயன் இன்று பதவியேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதியே வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தாமதமான நிலையில், இடைப்பட்ட காலத்தில் புதிய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் பதவி ஏற்பு விழாவில் 2ம் முறையாக
 

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி 99 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் பினராய் விஜயன் இன்று பதவியேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதியே வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தாமதமான நிலையில், இடைப்பட்ட காலத்தில் புதிய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் பதவி ஏற்பு விழாவில் 2ம் முறையாக கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரீப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பினராயி விஜயனுக்கு ஆளுநர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பினராயி விஜயனை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் 20 பேர் பதவியேற்கின்றனர். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 500 பேர் மட்டுமே பங்கேற்றிருப்பதாக தெரிகிறது. பினராயி விஜயன் பதவி ஏற்பு விழாவில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.