×

கொரோனா பாய்ச்சல்… திருவனந்தபுரம் ஊரடங்கை நீட்டித்த பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு முன்று வகையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மூன்று வகையான ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்தது. முதல் வகை என்பது மாவட்டம் முழுக்க முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். இரண்டாவது வகையில், ஹாடஸ்பாட்கள் மூடப்படும்,
 

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு முன்று வகையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மூன்று வகையான ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்தது.

முதல் வகை என்பது மாவட்டம் முழுக்க முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். இரண்டாவது வகையில், ஹாடஸ்பாட்கள் மூடப்படும், அந்த பகுதி மக்கள் வீடுகளில் இருப்பது கட்டாயமாக்கப்படும். லாக்டவுனின் மூன்றாவது வகையில் கொரோனா நோயாளிகள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் மருத்துவமனை அல்லது வீட்டில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருவனந்தபுரத்துக்கு முதல் வகை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த திருவனந்தபுரத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த முழு ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். முழு ஊரடங்கு காலத்தில் காலை 7 முதல் 11 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும். மாநிலத் தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மருந்துக் கடைகள் திறந்திருக்கும். மருந்துச் சீட்டு உள்ளவர்கள் சென்று மருந்து வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.