×

#BREAKING பி.எஃப். பிடித்தம்- ஊதிய உச்சவரம்பு உயர்வு

 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) பிடித்தத்துக்கான ஊதிய உச்சவரம்பை மாதம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (செ.16) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) பிடித்தத்துக்கான ஊதிய உச்சவரம்பை மாதம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் மேலும் 51 லட்சம் பேர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பயனடைவர்.

தற்போதைய நடைமுறைன் கீழ், அடிப்படை சம்பளம் மாதம் ரூ.15,000 வரை பெறும் ஊழியர்கள் கட்டாயமாக பிஎஃப் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். தற்போதைய அமைச்சரவை ஒப்புதலின்படி, இந்த வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ. 11,339 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக செப்டம்பர் 2014-ல் இந்த உச்சவரம்பு ரூ. 6,500-ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டது.