×

PayCM என ஸ்கேன் கோடுடன் பெங்களூரில் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ்

 

40% கமிஷன் பாஜக அரசு ஒப்பந்தங்களை பெற முதல்வருக்கு நேரடியாக பணம் அனுப்புங்கள், கியூ ஆர் கோட் வடிவில் முதல்வர் பசவராஜ் பொம்மை புகைபடத்தை நகர் முழுவதும் ஒட்டி காங்கிரஸ் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜக அரசு அனைத்து ஒப்பந்தங்களையும் பெற 40% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு நேரடியாக குற்றம் சாட்டி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பிரதமருக்கும் கடிதம் எழுதியது. இதை எடுத்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக 40% கமிஷன் அரசு என போராட்டம் நடத்தி வருகிறது. 

நடைபெற்று வரும் சட்ட சபையில் இந்த விவகாரத்தை பூதகரமாக எழுப்பி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று பெங்களூர் நகர் முழுவதும் 40 சதவீதம் பாஜக அரசு என்று பிரதிபலிக்கும் வகையில் ஒப்பந்தங்களை பெற முதல்வருக்கு நேரடியாக பணம் அனுப்புங்கள் என பேடியம் கியூ ஆர் கோட் வடிவில் முதல்வர் பசவராஜ் பொம்மை புகைபடத்தை கொண்ட போஸ்டர்களை நகர் முழுவதும் ஒட்டி காங்கிரஸ் நூதன பிரச்சாரம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் நூதன பிரச்சாரம் கர்நாடக பாஜக அரசுக்கு தேசிய அளவில் பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.