☰
×

ஓடும் ரயிலில் தீபமேற்றி பூஜை- சங்கு சத்தத்தால் ஷாக்கான பயணிகள் 

 

ஓடும் ரயிலுக்குள் பயணி ஒருவர் தீபம் ஏற்றி, சங்கு ஊதி பூஜை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

குளிர்சாதன (AC) வசதி கொண்ட ரயில் பெட்டிக்குள் பயணி ஒருவர் விளக்கேற்றிப் பூஜை செய்து, சங்கு ஊதும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  இதனையடுத்து ரயில் பெட்டிகளுக்குள் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவது சக பயணிகளின் உயிருக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், ரயில்வே பாதுகாப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

⚠️ ரயில் பயணத்தின் போது பாதுகாப்பு விதிகள் மிக முக்கியம்! 🚆🔥

​குளிர்சாதன (AC) வசதி கொண்ட ரயில் பெட்டிக்குள் பயணி ஒருவர் விளக்கேற்றிப் பூஜை செய்து, சங்கு ஊதும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

​ரயில் பெட்டிகளுக்குள் தீப்பற்றக்கூடிய…

— ரெயில் தகவல் | TN Rail Info (@TNRailinfo) November 26, 2026


இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் வகையில், ரயில் எண், பயணத் தேதி உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு இந்திய ரயில்வே கேட்டுள்ளது. ரயிலுக்குள் தீயைப் பயன்படுத்துவது சக பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.