×

நாய்களை குறிவைக்கும் ஆபத்தான ‘பார்வோ’ வைரஸ் – கவனம் இல்லாவிட்டால் மரணம் நிச்சயம்!

இந்தியாவில் மனிதர்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏராளமானோர் தங்கள் அன்புக்குரியவர்களை கொரோனாவுக்கு இழந்து தவித்து வருகின்றனர். இச்சூழலில் நாம் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்கும் புதுவகையான வைரஸ் தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றத்தாலும் கொரோனா ஊரடங்கால் நாய்களுக்கு தடுப்பூசிகள் போடுவது மந்தமானதாலும் மிகவும் ஆபத்தான பார்வோ வைரஸ் இந்திய நாய்களிடையே அதிவேகமாகப் பரவி வருவதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸால் ஒரு வயதுக்கு கீழான பப்பி நாய்க்குட்டிகளே அதிகம்
 

இந்தியாவில் மனிதர்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏராளமானோர் தங்கள் அன்புக்குரியவர்களை கொரோனாவுக்கு இழந்து தவித்து வருகின்றனர். இச்சூழலில் நாம் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்கும் புதுவகையான வைரஸ் தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றத்தாலும் கொரோனா ஊரடங்கால் நாய்களுக்கு தடுப்பூசிகள் போடுவது மந்தமானதாலும் மிகவும் ஆபத்தான பார்வோ வைரஸ் இந்திய நாய்களிடையே அதிவேகமாகப் பரவி வருவதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த வைரஸால் ஒரு வயதுக்கு கீழான பப்பி நாய்க்குட்டிகளே அதிகம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அவைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி மற்ற வயது நாய்களை விட குறைவாக இருக்கும். இதனால் மிக எளிதில் பார்வோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் எனவும் கூறியுள்ளனர். இந்த வைரஸ் தாக்கி அறிகுறிகள் தென்பட்ட உடனே கால்நடை மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் 4-5 நாட்களுக்குள் நாய் வைரஸின் கொடூரம் தாங்காமல் உயிரிழந்து விடும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கான அறிகுறிகள்:

1.ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு
2.வாந்தி
3.காய்ச்சல் அதிகரிப்பு
4.தீவிர உடல் சோர்வு
5.எடை இழப்பு
6.உடல் பலவீனமடைதல்
7.நீரிழப்பு

மேற்கண்ட எந்தவொரு அறிகுறிகள் வந்தாலும் உடனே கால்நடை மருத்துவரிடம் உங்களுடைய செல்லப்பிராணியை அழைத்துச் செல்லுங்கள். இந்த வைரஸ் உடல் ரீதியான தொடர்பு இல்லாமலேயே ஒரு நாயிடமிருந்து இன்னொரு நாய்க்கு பரவலாம். அதேபோல பார்வோ வைரஸால் தாக்கப்பட்ட நாய் சாப்பிட்ட உணவை மற்றொரு நாய் சாப்பிட்டால் அந்த நாய்க்கும் வைரஸ் பரவும். அதனால் உங்களது செல்லப்பிராணியை முன்பை விட மிகவும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.