ஜூலை 21ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்
Jun 4, 2025, 15:36 IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி கூடுகிறது.ஜூலை 21ஆம் தேதி கூடும் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.