×

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! - மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் மாதம்  11 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரு அவைகளும், தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி அவரையும் ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் திரும்பவும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.  


 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் அவை தொடங்கியது. அவை தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதனையடுத்து அவை மீண்டும் 12 மணிக்கு கூடிய நிலையில், மீண்டும் எதிர்க்கட்சிகள் அதே விவகாரத்தை எழுப்பி கூசலும், குழப்பும் போட்டனர். இதனால் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.