×

விளையாட அனுப்பவில்லை என 12 வயது சிறுவன் தற்கொலை ! மும்பையில் பரிதாபம் !

மும்பையில் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்ட 12 வயது சிறுவன் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக விளையாட அனுமதிக்காமல் போனதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 6 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மே 25ம் தேதி ஈத் பண்டிகை கொண்டாடிவிட்டு தனது அறையில் தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலை மகனை எழுப்ப பெற்றோர் சென்றபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் உடனடியாக
 

மும்பையில் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்ட 12 வயது சிறுவன் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக விளையாட அனுமதிக்காமல் போனதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
6 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மே 25ம் தேதி ஈத் பண்டிகை கொண்டாடிவிட்டு தனது அறையில் தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலை மகனை எழுப்ப பெற்றோர் சென்றபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு வந்தவுடன் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதுகுறித்து தந்தை தெரிவிக்கையில், “எங்கள் மகன் ஊரடங்கிற்கு முன்னர் தினமும் மாலை பூங்காவில் சைக்கிள் ஓட்டுவதற்கும் விளையாடுவதற்கும் பழகினான்.

ஊரடங்கு பிறப்பித்த உடன் வெளியில் செல்லவேண்டும் என அடம்பிடித்தார். ஆனால் நாங்கள் பல முறை அவனை சமாதானப்படுத்தி வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என கூறினோம். இதனால் வேதனை அடைந்த அவன் இந்த வருத்தத்தை வாட்ஸ்அப்பில் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளான். மேலும் நாங்களை அவனை வெளியில் செல்ல அனுமதிக்காததால் மிகுந்த வேதனையில் இருந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் அவரை விளையாடுவதற்கு வெளியே அழைத்துச் சென்றிருப்போம். என வேதனையுடன் கூறினார்.
சிறுவனின் வகுப்பு ஆசிரியர், மாணவன் பள்ளியிலும் மிகவும் சுறுசுறுப்பான குழந்தை என்றும், அவர் கிளாஸ் லீடராக இருந்தார் என்றும் கூறினார்.