×

ராமருக்கு போட்டியாக பரசுராம் அரசியல்! – சாதுக்கள் சங்கம் கண்டனம்

உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்களின் வாக்குகளைக் கவர பரசுராமை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் கையில் எடுத்திருப்பதற்கு சாதுக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிராமண சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களைக் கவரும் வகையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுக்க 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மிகப்பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தது. காங்கிரஸ் கட்சித் தரப்பில்,
 

உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்களின் வாக்குகளைக் கவர பரசுராமை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் கையில் எடுத்திருப்பதற்கு சாதுக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிராமண சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களைக் கவரும் வகையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுக்க 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கு பதிலடியாக, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மிகப்பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தது. காங்கிரஸ் கட்சித் தரப்பில், பரசுராம் ஜெயந்திக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இப்படி உத்தரப் பிரதேசத்தில் ராமரை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் பரசுராமரைக் கொண்டாட ஆரம்பித்திருப்பதற்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


உ.பி அரசியல் கட்சிகளின் இந்த நடவடிக்கை இந்து மதத்தை வலுவிழக்கச் செய்யும் என்று அகில இந்திய சாதுக்கள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கூறுகையில், “கடவுளின் அவதாரங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு சொந்தமானதாக கருதுவது தவறானது.

இந்த அவதாரங்கள் அனைத்தும் வணக்கத்துக்குரியவை. இந்த அவதாரங்களை சமூக சாதிய அடிப்படையில் பிரிப்பது இந்து மதத்தை வலுவிழக்கச் செய்யும்.
அவதாரக் கடவுள்களால் நாட்டில் சனாதன தர்மம் இணைக்கப்பட வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டப்படுகிறது. இந்த சூழலில் அரசியல் லாபத்துக்காக கடவுளைப் பிரிப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.