பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டால், இந்தியர்களும் தாக்கப்படுவார்கள் - பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர்!
பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டால், இந்தியர்களும் தாக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பேசியுள்ளார்.
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டால், இந்தியர்களும் தாக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பேசியுள்ளார்.பாகிஸ்தானில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானியர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது, தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் உள்ளோம் என கூறினார்.