×

இந்தியாவின் பதிலடிக்கு பயந்து ராணுவத்தில் இருந்து வெளியேறும் பாக். வீரர்கள்

 

இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறிவருகின்றனர். பஹல்காம்  தாக்குதலுக்கு பின்னர் அதிரடியாக 1,200 பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சினைகள் காரணமாகவும் ராஜினாமா செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் உள்ளிட்ட உட்பட பாகிஸ்தான் ஜெனரல்களின் குடும்பங்கள் இங்கிலாந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த வாரம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதல், இந்தியாவுடனான போர் அச்சத்தைத் தூண்டியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே ராஜினாமா மற்றும் ராணுவத்தை விட்டு வெளியேற கோரிக்கைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.