×

கோதுமை ஏற்றுமதி நிறுத்தம் விவசாயிகளுக்கு எதிரானது - ப.சிதம்பரம்

 

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு 74 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீடு பாக்கி வைத்து என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்று வரக்கூடிய சிந்தனை அமர்வு கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பொருளாதாரக் கொள்கைகளில் உடனடி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே வீழ்ந்து கிடக்கும்  பொருளாதாரத்தை ஒரளவு உயர்த்த முடியும்.  கொரோனா பொதுமுடக்க காலத்தில் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீடு தொகை அடுத்த மூன்று வருடங்களுக்கு நீடித்து வழங்கப்பட வேண்டும். பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் தேவை எனக் கூறுகிறீர்கள்? அதற்கான ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சி வழங்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த பா.சிதம்பரம் அத்தகைய ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சி வழங்கினாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என அனைவரும் நம்புகிறீர்களா? எனவும் மக்கள் சொல்வதையே கேட்க மறுப்பவர்கள் காங்கிரஸ் சொல்வதை மட்டும் எப்படி கேட்பார்கள் எனவும் அனைவருடைய கோரிக்கையும் பரிசீலிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்றார். 

இதேபோல் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநில அரசுகள் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைந்து வழங்க கோரியும் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு தேவையான நிதிகளை ஒதுக்க கோரியும் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தி வருகிறார்கள் என்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம் தென் மாநிலங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 78,704 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை நிலுவைத் தொகையாக உள்ளதாக தெரிவித்தார். 

இலங்கை பொருளாதார நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடுமா? என்பது தொடர்பான கேள்விக்கு அப்படி ஆக வேண்டும் என தான் நினைக்கவில்லை!அப்படி நடக்காமல் இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் வாக்குறுதியில் மத்திய அரசின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் உண்மையில் 2019ம் ஆண்டு விட 2022ம் ஆண்டில் தான் ரயில்வே, துணை ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கான காலி பணியிடங்கள் அதிகரித்து உள்ளதாகவும் காலி பணியிடங்கள் இருந்தாலும் நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறிய ப. சிதம்பரம், இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,  கொரோனாவுக்கு பின் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மெதுவாக உள்ளதாகவும் கூறினார். அரசின் தவறான கொள்கை காரணமாக பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.