×

“அப்போ காந்தியும் ‘Andolen Jeevi’ தான மிஸ்டர் மோடி” – ப.சிதம்பரம் நக்கல்!

சமீபத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் Andolen Jeevi ஒரு புதிய வார்த்தையை அறிமுகம் செய்துவைத்தார். இந்த வார்த்தைக்குப் விவசாயிகள் சங்கத்தினரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வார்த்தையின் ஒற்றை வரி அர்த்தம் ‘தொழில்முறை போராட்டக்காரர்கள்’, அதாவது போராட்டத்தையே தொழிலாக வைத்திருப்பவர்கள் என்று பொருள். ஆனால் இதற்கு நீண்ட நெடிய விளக்கத்தையும் பிரதமரே அளித்தார். விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அவர், “நாட்டில் ஒரு புதியவகை கூட்டம் உருவாகியிருக்கிறது. அக்கூட்டம் ஒரு சட்டத்தை அரசு முன்மொழிந்தால், அது
 

சமீபத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் Andolen Jeevi ஒரு புதிய வார்த்தையை அறிமுகம் செய்துவைத்தார். இந்த வார்த்தைக்குப் விவசாயிகள் சங்கத்தினரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வார்த்தையின் ஒற்றை வரி அர்த்தம் ‘தொழில்முறை போராட்டக்காரர்கள்’, அதாவது போராட்டத்தையே தொழிலாக வைத்திருப்பவர்கள் என்று பொருள். ஆனால் இதற்கு நீண்ட நெடிய விளக்கத்தையும் பிரதமரே அளித்தார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அவர், “நாட்டில் ஒரு புதியவகை கூட்டம் உருவாகியிருக்கிறது. அக்கூட்டம் ஒரு சட்டத்தை அரசு முன்மொழிந்தால், அது யாருக்கான சட்டமாக இருக்கிறதோ அவர்களின் பின்னால் இருந்து எதிர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்துகிறார்கள். மாணவர்கள் போராட்டமா அங்கேயும் இருப்பார்கள். மருத்துவர்கள் போராட்டாமா அங்கேயும் அவர்கள் இருப்பார்கள். இவர்களிடமிருந்து நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களால் போராட்டம் இல்லாமல் வாழ முடியாது. தவறான கருத்தியலை மக்களிடம் விதைத்து தவறானபாதையில் வழிநடத்துவதே அவர்களின் பிரதான திட்டம். இவர்கள் சர்வதேச அளவில் அனைத்து இடங்களிலும் இருந்துகொண்டு இந்தியாவைப் பிரித்தாள நினைக்கிறார்கள்” என்றார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். Andolen Jeevi வார்த்தையை மையப்படுத்தி ஒரு கேலிச் சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலானது. பிரிட்டிஷ் சர்வாதிகாரத்தை எதிர்த்து இந்தியாவில் விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அவர்களும் ஒருவகையில் தொழில்முறை போராளிகள் தான். அப்போ அவர்களையும் சேர்த்து மோடி விமர்சிக்கிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த வகையில் பிரதமரின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “நானும் Andolen Jeeviaஆக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஆனால் எங்களை எல்லாரையும் விட மகாத்மா காந்தி தான் ஆகச்சிறந்த Andolan Jeevi” என்று நக்கல் செய்துள்ளார். தற்போது #iamanandolanjeevi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.