×

இது இந்திய ராஜதந்திரத்திற்குப் பெரிய சவால் - ப.சிதம்பரம்

 

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா என்பதே கேள்வி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது. அமெரிக்க விமானம் 119 இந்தியர்களை இன்று கொண்டு வருகிறது. அந்த 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா என்பதே கேள்வி.
அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா? இந்திய ராஜதந்திரத்திற்குப் பெரிய சவால். இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும், இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.