×

ப.சிதம்பரத்திற்கு காங்.கில் முக்கிய பதவி?

முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் தலைவராக உள்ளார். மக்களைக் கவரும் விதத்தில் ஆளும் பாஜ.கவிற்கு எதிராகப் புள்ளி விவரங்களுடன் பேசக் கூடிய தனித்தன்மை படைத்தவர். இந்த நிலையில் பாஜ.கவில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா எனப் பல பேரின் பேச்சுக்கள் இப்போது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுத்துப் பேச காங்கிரஸ் கட்சியில் சில மூத்த தலைவர்களைத் தேடி வருகிறார்கள். இந்த நிலையில்
 

முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் தலைவராக உள்ளார். மக்களைக் கவரும் விதத்தில் ஆளும் பாஜ.கவிற்கு எதிராகப் புள்ளி விவரங்களுடன் பேசக் கூடிய தனித்தன்மை படைத்தவர். இந்த நிலையில் பாஜ.கவில் பிரதமர் மோடி

உள்துறை அமைச்சர் அமித்ஷா எனப் பல பேரின் பேச்சுக்கள் இப்போது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுத்துப் பேச காங்கிரஸ் கட்சியில் சில மூத்த தலைவர்களைத் தேடி வருகிறார்கள்.


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின், தகவல் தொடர்பு பிரிவுத் தலைவராக இருந்த அரியானாவைச் சேர்ந்த ரன்தீப் சுர்ஜேவாலா, சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து ‘காங்கிரஸ் கட்சியின், தேசிய தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நியமிக்கப்படலாம்’ எனத் தகவல் வெளியாகி உள்ளது.