×

கும்பமேளாவில் கும்பல் கும்பலாய் சுற்றித்திரிந்த சாதுக்கள்… கொத்து கொத்தாய் குவியும் கொரோனா பாதிப்புகள்!

சித்தரை முதல் நாளிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா நடக்கும். அதாவது இந்தத் தினங்களில் ஹரித்துவார், ரிஷிகேஷ் கங்கை ஆகிய நதிக்கரைகளில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இது மிகவும் புனிதமான விசேஷமாகக் கருதப்படுகிறது. இச்சூழலில் கொரோனா 2ஆவது அலை பரவிவரும் வேளையில் கும்பமேளா நடைபெற்றால் மிகப்பெரிய ஆபத்து நேரிடும் என சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. கும்பமேளாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பல
 

சித்தரை முதல் நாளிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா நடக்கும். அதாவது இந்தத் தினங்களில் ஹரித்துவார், ரிஷிகேஷ் கங்கை ஆகிய நதிக்கரைகளில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இது மிகவும் புனிதமான விசேஷமாகக் கருதப்படுகிறது. இச்சூழலில் கொரோனா 2ஆவது அலை பரவிவரும் வேளையில் கும்பமேளா நடைபெற்றால் மிகப்பெரிய ஆபத்து நேரிடும் என சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. கும்பமேளாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பல லட்சக்கணக்கான மக்கள் ஹரித்துவார், ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திரண்டு புனித நீராடினர். கடந்த 2 நாட்களில் மட்டும் 48 லட்சம் மக்கள் புனித நீராடியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நீராட வந்த பக்தர்களும் சாதுக்களும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக சுற்றித்திரிந்தனர்.

இச்சூழலில் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கும்பமேளாவில் கலந்துகொண்ட 2 லட்சத்து 36 ஆயிரத்து 751 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,701 பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு பரிசோதனை முடிவுகள் வரும் பட்சத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் என்று ஹரித்துவார் சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.