×

கொரோனவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது… வைரஸ் பாதிப்பு 2 லட்சத்தை விஞ்சியது…

லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் தீவிரமாக வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாமால் இருந்துள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனையை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதால் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை
 

லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் தீவிரமாக வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாமால் இருந்துள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனையை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதால் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒட்டுமொத்த அளவில் 64.70 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 3.81 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் 29.84 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

அந்த அமைப்பின் அறிக்கையின்படி, நம் நாட்டில் நேற்று மட்டும் புதிதாக சுமார் 8,813 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.07 லட்சத்தை தாண்டியது. அதேசமயம் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,00,285ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,829ஆக அதிகரித்தது. கொரோனா வைரஸால் இறந்தவர்களில் 50 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.