×

அமித்ஷா மீது மசோதாவை கிழித்து வீசிய எதிர்க்கட்சியினர்

 

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வேணுகோபால் மசோதாவை கிழித்து அமித்ஷா மூஞ்சியில் வீசினார் 


முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மசோதாவை 31 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்புமாறு சபாநாயகரிடம் அமித்ஷா முன்மொழிந்தார். குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் குற்றவாளிகள் அல்ல, கைதானாலே பதவி பறிப்பு என்பது அரசியல் அமைப்பை, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அமித்ஷா மீது மசோதாவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வேணுகோபால், அமித்ஷா குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார் என பேரவையில் கூறினார்.  அதற்கு பதிலளித்த அமித்ஷா, நான் ஒரு போலி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டேன். ஆனாலும், நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு எனது பதவியை ராஜினாமா செய்தேன். விடுதலை செய்யப்படும் வரை எந்த ஒரு  அரசியலமைப்பு பதவியையும் வகிக்கவில்லை. நீங்கள் எனக்கு ஒழுக்கத்தை பற்றி பாடம் எடுக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.