'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் நிறுத்தப்படவில்லை, தொடர்கிறது- இந்திய விமானப்படை
May 11, 2025, 14:22 IST
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நிறுத்தப்படவில்லை, தொடர்கிறது என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.