×

ஆபரேஷன் சிந்தூர்- நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விளக்கம்

 

இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விளக்கம் அளித்தார். 
 
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.  இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் முற்றிய நிலையில், பாகிஸ்தான் வான் ஏவுதளங்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க பல்வேறு கட்சிகளை சார்ந்த குழுக்களை மத்திய அரசு அமைத்தது. 

இந்த நிலையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விளக்கம் அளித்தார். வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக உள்ள எம்பிக்கள் சசிதரூர், அசாதுதீன் ஓவைசி, அபராஜிதா சாரங்கி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.