×

ரயில் நிலையங்களில் உணவகங்கள், மருந்து கடைகள், புத்தக கடைகள் திறக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: ரயில் நிலையங்களில் உணவகங்கள், மருந்து கடைகள், புத்தக கடைகள் திறக்க மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவற்றிடம் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் நான்கு கட்டங்களாக இதுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும்
 

டெல்லி: ரயில் நிலையங்களில் உணவகங்கள், மருந்து கடைகள், புத்தக கடைகள் திறக்க மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவற்றிடம் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் நான்கு கட்டங்களாக இதுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டன.

வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் ஏசி பெட்டிகள் இல்லாத 200 ரயில்கள் தினமும் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது. இந்த 200 ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 200 பயணிகள் ரயில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்திற்கான எந்த ரயிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகள் வரத் தொடங்கிய பிறகு உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் ஆகியவற்றின் தேவைகள் அதிகரிக்கும் என்பதால் உடனடியாக அவற்றை திறப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்குமாறு மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவற்றிடம் மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.