அம்மாடியோவ்... ரூ.771 கோடிக்கு மதுவிற்பனை!
ஓணம் பண்டிகை காலத்தின் 8 நாட்களில் மட்டும் கேரளாவில் ரூ.771 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மாநில மதுபான விற்பனை கழகத்தின் வருமானமும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகைக் காலத்தின் முதல் எட்டு நாட்களில், மாநில அரசுக்குச் சொந்தமான பெவ்கோ (Bevco) நிறுவனத்தின் மதுபான விற்பனை சாதனை அளவாக ரூ.770 கோடியைத் தாண்டியுள்ளது. கலால் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகைக் காலத்தின் முதல் எட்டு நாட்களில், அதாவது ஆகஸ்ட் 25 வரை, மாநிலம் முழுவதும் உள்ள கேரள மாநில பானங்கள் கழகத்தின் (Bevco) விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.771.29 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகைக் காலத்தின் இதே காலகட்டத்தில் ரூ.694.96 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.
திருவோணத்திற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 25 அன்று உத்திராடம் நாளில், பெவ்கோ விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.126.31 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு விற்பனையான ரூ.137.64 கோடியை விடக் குறைவு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025-ஆம் ஆண்டில் ஓணம் பண்டிகைக் காலத்தில் பெவ்கோ நிறுவனம் ரூ. 826.38 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்தது. இந்நிலையில் இந்த ஆண்டு விற்பனை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.