×

இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்தது ஒமிக்ரான் பாதிப்பு : தமிழகத்தில் மட்டும் இத்தனை பேருக்கு தொற்றா?

 

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  4,003 ஆக உயர்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதி விலக்கு அல்ல. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களை காட்டிலும் அதிவேகமாக பரவி வரும் சூழலில், தொற்று பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில்  46,569 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 3,623 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 4033 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரானில் இருந்து 1,552 பேர் குணமடைந்த நிலையில் 2451 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுவரை 27 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,216 பேரும், ராஜஸ்தானில் 1,216 பேரும், டெல்லியில் 513 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 185 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது குறிப்பிடத்தக்கது.