×

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ கடந்தது!

 

இந்தியாவில்  கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு தடுப்பூசிகளை அறிமுகம் செய்து அதை செலுத்தும் பணியை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு  என்பது வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா வைரஸான  ஒமிக்ரான் பாதிப்பு ஆகியவை வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 2135 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1892 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில்  2135 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 653பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் 121  ,குஜராத்தில் 154, கேரளாவில் 185  , ராஜஸ்தானில் 174 , தெலுங்கானாவில் 84   என மொத்தம் 2135   பேருக்கு தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   இருப்பினும் இதுவரை 828 பேர் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

இதனிடையே  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 58,097 ஆக பதிவாகியுள்ள நிலையில்,   534  பேர் பலியாகியுள்ளனர்.  அதேசமயம் கொரோனாவால் 2,14,004  பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் தடுப்பூசியானது 147.72 டோஸ்  செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.