×

 இந்தியாவில் அதிவேகமாக பரவும் ஒமிக்ரான் :  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700ஆக உயர்வு!

 

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  டெல்லி, மேற்கு வங்காளம், அரியானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில்1,700 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,525 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,700 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 510 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் 121  ,குஜராத்தில் 136, கேரளாவில் 156 , ராஜஸ்தானில் 120 , தெலுங்கானாவில் 67 ,அரியானாவில் 63,  கர்நாடகாவில்  64,  ஆந்திரப் பிரதேசத்தில் 17 என மொத்தம் 23 மாநிலங்களில் 1,700 பேருக்கு தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அதேபோல் அதிகபட்சமாக உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 193 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.   ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை கொரோனாவிலிருந்து 639 பேர் குணமாகியுள்ளனர்.