×

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறை… மக்களவை உறுப்பினர்கள் 2 அவைகளிலும் அமர உள்ளனர்

கோவிட்-19 பரவல் காரணமாக நாடாளுமன்றத்தில் சமூக இடைவெளி விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும், மக்களவை உறுப்பினர்கள் 2 அவைகளிலும் அமருவர் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படுவதால் கூட்டத்தொடரை மிகவும் பாதுகாப்பாக நடத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
 

கோவிட்-19 பரவல் காரணமாக நாடாளுமன்றத்தில் சமூக இடைவெளி விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும், மக்களவை உறுப்பினர்கள் 2 அவைகளிலும் அமருவர் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படுவதால் கூட்டத்தொடரை மிகவும் பாதுகாப்பாக நடத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: மக்களவை அறையில் மொத்தம் 257 உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள பார்வையாளர்கள் கேலரியில் 172 உறுப்பினர்கள் அமருவர்.

சபாநாயகர் ஒம் பிர்லா

மாநிலங்களவை அறையில் 60 எம்.பி.களும் அங்கு உள்ள பார்வையாளர்கள் கேலரியில் 51 பேர் அமரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வு தொடர்ச்சியாக நடைபெறும். மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் இரண்டுக்கும் அந்த அவைகளில் திரை இருக்கும். அமர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒலி அமைப்பு இரு அவைகளிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்

அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் சோதிக்கப்படுவார்கள், அனைத்து உறுப்பினர்களும் ஆர்டி-பி.சி.ஆர். கோவிட்-19 சோதனைக்கு செல்ல வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை மொபைல் செயலி வாயிலாக பதிவு செய்யப்படும். மழைக்கால கூட்டத்தொடருக்கான மக்களவையின் நடவடிக்கைகள் வரும் 14ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். காலை 9 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை என இரண்டு இடைவெளியில் அமர்வு நடத்தப்படும். பூஜய் நேரம் 30 நிமிடங்களுக்கு இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.