×

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை! – மத்திய அரசு அதிரடி

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை! – மத்திய அரசு அதிரடி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுக்க கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு சரியான சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு
 

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை! – மத்திய அரசு அதிரடி
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுக்க கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு சரியான சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பல அரசு மருத்துவர்கள் இதனால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல உள்ளதாக கூறினர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுள்ளது. எல்லா மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். ஊதியம் வழங்கப்படுவதை மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும். அப்படி ஊதியம் வழங்கப்படாவிட்டால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறியுள்ளது.