×

நாடு முழுவதும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. ரயில்களில் அதிகமாகப் பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே ரயில்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும் தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அதனையும் ரத்து செய்யுமாறு அரசு அறிவுறுத்தியதன் பேரில், அந்த ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே
 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. ரயில்களில் அதிகமாகப் பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே ரயில்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும் தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அதனையும் ரத்து செய்யுமாறு அரசு அறிவுறுத்தியதன் பேரில், அந்த ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்சேவை ரத்துக்கான கால அவகாசம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை ரயில்சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில், புறநகர் ரயில் மற்றும் விரைவு ரயில் உள்ளிட்ட எந்த சேவைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.