×

திருப்பதியில் முழங்காலால் நடந்து சென்று சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டி

 

விராட் கோலி என்னுடைய ரோல் மாடல் என ஏழுமலையானை வழிபட்ட பின் கிரிக்கெட்டர் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டியளித்தார்.


இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானை வழிபட்டார். முன்னதாக நேற்று இரவு திருப்பதியில் இருந்து திருமலைக்கு அலுபிரி மலைப்பாதை படிக்கட்டுகள் வழியாக முழங்காலில் நடந்து சென்ற அவர் இன்று காலை விஐபி  தரிசனத்தில் கோயிலுக்கு சென்று ஏழுமலையானை வழிப்பட்டார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டு  வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

தொடர்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நிதிஷ் குமார் ரெட்டி, “விராட் கோலியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நான் கிரிக்கெட் ஆடத் துவங்கினேன். இப்போது அவருடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடுவது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. என்னுடைய ரோல் மாடல் ஆன விராட் கோலி என்னை புகழ்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை ஏழுமலையானை வழிபடுவது வழக்கம்” என்று தெரிவித்தார்.