×

வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம்- நிர்மலா சீதாராமன்

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு, ‘ஆத்மாநிர்பார் பாரத்’ திட்டத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உறுதி திட்டம் மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில வங்கிகள், உத்தரவாதமில்லாமல் வழங்கப்படும் அக்கடன்களை தர மறுப்பதாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வங்கிகள், தகுதியான
 

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மத்திய அரசு, ‘ஆத்மாநிர்பார் பாரத்’ திட்டத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உறுதி திட்டம் மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில வங்கிகள், உத்தரவாதமில்லாமல் வழங்கப்படும் அக்கடன்களை தர மறுப்பதாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வங்கிகள், தகுதியான நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை மறுக்கக் கூடாது. அவ்வாறு மறுத்தால், அது குறித்த புகாரை எனக்கு அனுப்பலாம். நான் நடவடிக்கை எடுப்பேன்.

 

தொழில் துறையின் அவசர கடனுக்கு, மேம்பாட்டு நிதி மையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஹோட்டல் துறைக்கான கடன் சலுகைக் காலத்தை நீட்டிப்பதில் ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து வருகிறோம்” என தெரிவித்தார்.