×

அச்சுறுத்தும் ஒமைக்ரான் :  நாளை முதல் இரவு நேர ஊடங்கு அமல்...

 


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 122 ஒமைக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் 17 மாநிலங்களில்  358 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக டெல்லியில் 67 பேருக்கும்,  தெலங்கானாவில் 38 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும், கர்நாடகாவில் 31 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்வதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தியது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது  உத்தரப்பிரதேசத்திலும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  இந்த இரவு நேர ஊரடங்கு நாளை  முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை வித்து ஏற்கனவே உத்தரபிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊரடங்கின்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருமணங்களில் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.