நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய ரூல்ஸ்
Jun 30, 2026, 20:40 IST
நாளை முதல் AADHAAR செயலி மூலம் அடுத்த 6 மாதங்களுக்கு இலவசமாக மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. இதற்கு முன்பு சேவைக் கட்டணமாக ரூ.75 வசூலிக்கப்பட்ட நிலையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கான அபராதம் ரூ.250-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அபராத தொகை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. டிக்கெட் இல்லாமல் பயணித்தால், டிக்கெட் கட்டணத்துடன் ரூ.500 அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். மற்றொருவரின் பெயரில் பதிவு செய்த டிக்கெட்டில் பயணம் செய்தால், டிக்கெட் கட்டணத்துடன் குறைந்தபட்சம் ரூ.500 கூடுதல் தொகை வசூலிக்கப்படும். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.