சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்
முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
எதிர்கட்சிகளை மொத்தமாக வேட்டையாட முக்கிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 5 வருடம் சிறை தண்டனை பெறக்கூடிய வழக்கில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் யார் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களது பதவி தானாக பறிபோகும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அதாவது அமலாக்கத்துறை பாஜக அல்லாத ஒரு மாநில முதல்வராய் ஏதாவதொரு காரணத்திற்காக கைது செய்து 30 நாள் சிறையில் வைத்தால் அவரது பதவி பறிபோகும். கட்சியில் பெறும் குழப்பம் ஏற்படும். எதிர்கட்சியாக பாஜக இருந்தால் சுலபமாக ஆட்சியை பிடிக்கலாம். மற்றொரு பக்கம் இதை காரணம் காட்டியே பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளை தொடர்ந்து மிரட்டலாம்.