×

மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

 

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில், முதல்வராக பாஜகவின் கேம்சந்த் சிங் பதவியேற்றார்.

மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் கேம்சந்த் சிங். குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்ட நிலையில், புதிய அரசு பதவியேற்றுள்ளது. புதிய முதல்வருக்கு இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் அம்மாநில ஆளுநர் அஜய் பல்லா.

2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றது குறிப்பிடதக்கது.