×

இந்தியாவும், சில அரசியல் சக்திகளும் என்னை பதவியிலிருந்து வெளியேற்ற சதி… கதறும் நேபாள பிரதமர் கே.பி. ஓலி

நேபாளத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாக செய்தி வெளியானதையடுத்து அந்நாட்டு பிரதமர் கே.பி.ஓலிக்கு கடுமையாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் கே.பி. ஒலியின் சொந்த கட்சியே அவரை பிரதமர் பதவி அல்லது கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு மிகுதியான அழுத்தத்தை கொடுத்து வருகின்றன. இதிலிருந்து தப்பிக்க இந்தியாவை குற்றச்சாட்டியுள்ளார் கே.பி.ஓலி. நேபாள பிரதமர் கே.பி.ஒலி இது தொடர்பாக கூறியதாவது: பல பத்தாண்டுகளாக இந்தியா சட்டவிரோதமாக வைத்திருக்கும் நேபாளத்தின் நிலப்பரப்பை மீட்டெடுப்பதில் எனது அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுத்தது. இதனால்
 

நேபாளத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாக செய்தி வெளியானதையடுத்து அந்நாட்டு பிரதமர் கே.பி.ஓலிக்கு கடுமையாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் கே.பி. ஒலியின் சொந்த கட்சியே அவரை பிரதமர் பதவி அல்லது கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு மிகுதியான அழுத்தத்தை கொடுத்து வருகின்றன. இதிலிருந்து தப்பிக்க இந்தியாவை குற்றச்சாட்டியுள்ளார் கே.பி.ஓலி.

நேபாள பிரதமர் கே.பி.ஒலி இது தொடர்பாக கூறியதாவது: பல பத்தாண்டுகளாக இந்தியா சட்டவிரோதமாக வைத்திருக்கும் நேபாளத்தின் நிலப்பரப்பை மீட்டெடுப்பதில் எனது அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுத்தது. இதனால் இந்திய ஊடகங்கள், அறிவாளிகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மற்றும் நேபாள சக்திகள் என்னை பதவி நீக்கம் செய்ய சதி செய்கின்றன.

என்னை அதிகாரத்திலிருந்து நீக்க என் கட்சியில் உள்ள சில அரசியல் தலைவர்கள் மற்றும் நேபாளத்தின் எதிர்க்கட்சி தலைவர்கள் அன்னிய சக்திகளுடன் இணைந்துள்ளனர். நேபாளத்தில் உள்ள சில தலைவர்கள் இதில் தீவிரமாக உள்ளனர். அத்தகைய சக்திகளால் எனது கட்சியும், நாடாளுமன்ற கட்சி குழுவும் திசை திரும்ப வேண்டாம். தேசியவாதத்துக்கு ஆதரவான முடிவுகளை எடுப்பதால் பிரதமரை பதவியிலிருந்து வெளியேற்றும அளவுக்கு நேபாளத்தின் தேசியவாதம் பலவீனமானதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒலி தேசியவாதம் பற்றி பேசும்போது, நேபாள அரசியல் விவகாரங்களில் கம்யூனிஸ்ட் சீனாவின் தலையீட்டில் அவருக்கு எந்தபிரச்சினையும் இல்லை என குறிப்பிடத்தக்கது.