நேபாள பெருவெள்ளம் - பலியானோர் எண்ணிக்கை 330 ஆக உயர்வு
நேபாள பெருவெள்ளத்தில் இதுவரை 330 பேர் உயிரிழப்பு என நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
இமயமலைப் பகுதியைத் தாக்கிய பனிப்பாறை வெள்ளத்தால் , நேபாளத்தில் குறைந்தது 359 பேரும், திபெத்தில் மூவரும் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,400 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . நேபாள-சீன எல்லைப் பகுதியில் மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். நேபாளத்தில் உள்ள ரசுவா பகுதியையும், போதேகோஷி மற்றும் திரிசூலி நதிப் படுகைகளையொட்டிய பகுதிகளையும் வெள்ளம் பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது.
நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்ட இடத்தில் உருவான ஏரி, நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும், உடைந்து போகும் அபாயம் உள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் குடியிருப்பாளர்களையும் மீட்புப் பணியாளர்களையும் ஆற்றங்கரைகளிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.