நேபாள வெள்ளம்-275 இந்தியர்கள் மாயம்!
நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் நிலவரத்தை மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. 108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 50 பேருடன் தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து நேபாளத்துக்குள் 598 இந்தியர்கள் பாதுகாப்பாக வந்துள்ளனர். சீனாவிலிருந்து இன்னும் வெளியேறாத 900 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.பெய்ஜிங் இந்திய தூதரகம் அவர்களுடன் தொடர்பில் உள்ளது.
275 இந்தியர்கள் காணவில்லை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 128 பேரும் காணவில்லை என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் 84 பேர் மீட்பு இதில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் இன்று இந்தியா திரும்பினர்.149 பேர் சீனாவில் இருந்து பாதுகாப்பாக நேபாளம் வந்துள்ளனர். சுமார் 400 இந்தியர்கள் சீனாவில் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை வெளியேற்ற இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 320 பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.