×

இன்று நடைபெற்ற நீட் தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் அதிர்ச்சி

 

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் NEET-PG தேர்வு மையத்தில் தேர்வு தொடங்கியதில் இருந்து கணினிகள் அடுத்த‌டுத்து முடங்கியதாக புகார் எழுந்துள்ளது.


எம்.டி, எம்.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் முதுகலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று கணினி வழியில் ஒரேகட்டமாக நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இத்தேர்வு மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வை 2.73 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் எழுதினர். நீட் தேர்வையொட்டி மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் NEET-PG தேர்வு மையத்தில் தேர்வு தொடங்கியதில் இருந்து கணினிகள் அடுத்த‌டுத்து முடங்கியதாக புகார் எழுந்துள்ளது. 20 முறைக்கும் மேல் சிஸ்டம் முடங்கியதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டினர். ஆகையால் NEET-PG தேர்வை ரத்து செய்ய கோரி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் நீட் பிஜி 2026 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக NBEMS அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெய்ப்பூர், சிதாபுராவில் தேர்வு மையத்தில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக இன்று நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் பிஜி 2026 புதிய தேர்வு செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.