×

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல், மாணவர்கள் தற்கொலை என பரபரப்பான சூழல்களுக்கிடையே கடந்த செப்.13ம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது. தேர்வுக்கு 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 14.37 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். கொரோனாவால் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறுதேர்வு நடத்துமாறு உத்தரவிட்டதன் பேரில்,
 

செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல், மாணவர்கள் தற்கொலை என பரபரப்பான சூழல்களுக்கிடையே கடந்த செப்.13ம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது. தேர்வுக்கு 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 14.37 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். கொரோனாவால் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறுதேர்வு நடத்துமாறு உத்தரவிட்டதன் பேரில், கடந்த 14ம் தேதி பிற்பகல் மீண்டும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தன் படி, இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

மாணவர்கள் nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது, என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது நினைவு கூரத்தக்கது.