×

 நீட் தேர்வு எப்போது? வெளியான முக்கிய தகவல் 

 

2024 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  இந்த தேர்வுக்கான முடிவுகள் வருகிற ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஜேஇஇ தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என்றும் முதல் அமர்வானது ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்குள்ளும் , இரண்டாம் வகுப்பு அமர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.