×

நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.14ல் தேர்வு!

நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, அக்.14ம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல், மாணவர்கள் தற்கொலை என பரபரப்பான சூழலுக்கு இடையே கடந்த செப்.13ம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது. அந்த தேர்வில், கொரோனா பீதியால் பல மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமில்லாமல், தேர்வு நடந்த போது பொதுப்போக்குவரத்து இல்லாததாலும் மாணவர்கள் சிலர் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனையடுத்து, கொரோனா அச்சுறுத்தலால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும்
 

நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, அக்.14ம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல், மாணவர்கள் தற்கொலை என பரபரப்பான சூழலுக்கு இடையே கடந்த செப்.13ம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது. அந்த தேர்வில், கொரோனா பீதியால் பல மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமில்லாமல், தேர்வு நடந்த போது பொதுப்போக்குவரத்து இல்லாததாலும் மாணவர்கள் சிலர் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இதனையடுத்து, கொரோனா அச்சுறுத்தலால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு 14ம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை அக்.16ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.