×

கடன் வாங்காதவர்களை கடன் வாங்க வைத்த கொரோனா.. குடும்பத்தை நடத்த கடன் வாங்கிய 46 சதவீத இந்தியர்கள்

தொற்றுநோய் காலத்தில் 46 சதவீதம் பேர் குடும்பத்தை நடத்துவதற்கு கடன் வாங்கியதாக ஆய்வில் ஒன்றில் தெரிவித்துள்ளனர். தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. தவிர்க்க முடியாத மற்றும் வேறுவழியில்லாமல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோதிலும், அது பெரும்பாலான இந்தியர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன, தொழிலாளர்கள் வேலை இழந்தனர், பிழைப்பு இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல 100
 

தொற்றுநோய் காலத்தில் 46 சதவீதம் பேர் குடும்பத்தை நடத்துவதற்கு கடன் வாங்கியதாக ஆய்வில் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. தவிர்க்க முடியாத மற்றும் வேறுவழியில்லாமல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோதிலும், அது பெரும்பாலான இந்தியர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன, தொழிலாளர்கள் வேலை இழந்தனர், பிழைப்பு இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல 100 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

வருவாய் நின்று போனதால் பல குடும்பங்கள் தங்களது கையிருப்பை காலி செய்ய தொடங்கின. அதுவும் காலியானதால் கடன் வாங்கிய காலத்தை தள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அண்மையில் ஹோம் கிரெடிட் இந்தியா என்ற நிறுவனம், தற்போதைய தொற்றுநோய் காலத்தில் இந்தியர்கள் எப்படி தங்களது குடும்பத்தை நடத்தினர் என்பது குறித்து நாட்டின் பெரிய 7 நகரங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் 1000 பேர் பங்கேற்றனர்.

பணம்

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 46 சதவீதம் பேர் தங்களது குடும்பத்தை நடத்துவதற்காக கடன் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். சம்பளம் குறைப்பு அல்லது சம்பளம் தாமதம் ஆகியவற்றை தாங்கள் கடன் வாங்கியதற்கான முக்கிய காரணமாக பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தப்படியாக ஏற்கனவே வாங்கிய கடனுக்கு மாத தவணை கட்ட வேண்டியதை 27 சதவீதம் பேர் காரணமாக குறிப்பிட்டுள்ளனர். வேலை இழந்ததால் கடன் வாங்கியதாக 14 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வேலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதும் அல்லது சம்பளம் வரும்போது பணத்தை திருப்பி கொடுக்க அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் தொற்றுநோய் காலத்தில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கவே பெரும்பகுதியினர் விரும்பியுள்ளனர்.