×

மீண்டும் ஹரியானா முதல்வராகிறார் நயாப் சிங் சைனி..!

 

ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் நயாப் சிங் சைனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   பாதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  நாளை அவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 

ஹரியானா மாநில சட்ட பேரவைக்கு நடந்த முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கவும், முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்யவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவை கட்சி தலைமை அமைத்தது.  ஹரியானா மாநிலத்தில் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான அக்குழுவின் தலைமையில்  பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று பஞ்ச்குலாவில் நடைபெற்றது.  

இந்தக் கூட்டத்தில் அமமாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார்.  சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு  சம்மதம் தெரிவித்தனர். மேலும் நாளை ஹரியானா மாநில முதலமைச்சர் மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் ஹரியானா மாநில பாஜக தெரிவித்துள்ளது. அதன்படி நாளை ( அக்.17) நயாப் சிங் மீண்டும் ஹரியானா முதலமைச்சராக பதவியேற்கிறார்.