×

மணிப்பூர் சம்பவம்...முன்பே புகார் வந்தும் கண்டுகொள்ளாத தேசிய மகளிர் ஆணையம் ?

 

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பற்றி ஜூன் 12ம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் எந்த பதிலும் வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலானது. அந்த பெண்கள் மர்மநபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் இரு பெண்களும் கதறி அழுவும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவாகரம் முன்கூட்டியே தேசிய மகளிர் ஆணையத்திற்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.  மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பற்றி ஜூன் 12ம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாகவும், எந்த பதிலும் வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 2 பெண்கள் மற்றும் வெளிநாட்டில் இயங்கும் பழங்குடியின அமைப்பு இமெயில் மூலம் புகார் அளித்துள்ளனர்; தற்போது வீடியோ வைரலானதால் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கிறது.